குட்டியை காப்பாற்ற மனிதர்களிடம் உதவி கேட்ட சிறுத்தை - நெஞ்சை உருக வைக்கும் வீடியோ
குட்டியை மீட்க சிறுத்தை மனிதர்களிடம் உதவி கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுத்தை
காட்டில் வசித்து வரும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஆக்ரோஷமான விலங்குகளாக கருதப்படுகிறது. பெரும்பாலும் காட்டில் மட்டும் வசிக்கும் இது மாதிரியான விலங்குகளை பார்த்தாலே பயத்தில் தப்பி ஓடவே மனிதர்கள் முயற்சி செய்வார்கள்.
இந்நிலையில் சிறுத்தை ஒன்று அதனுடைய குட்டியை மீட்க மனிதர்களிடம் உதவி கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குட்டி மீட்பு
அந்த வீடியோவில், சிறுத்தை சாலையில் செல்லும் ஒவ்வொரு மனிதரிடமும் சென்று அவர்களது கைகளை பிடித்து இழுக்கிறது. சிறுத்தை யாரையும் தாக்க முற்படாமல் கெஞ்சுவது போல் இருந்தது. ஆனால் யாரும் அதற்கான காரணத்தை அறிய விரும்பாமல் பயத்தில் விலகி செல்கின்றனர்.
இறுதியாக ஒரு மனிதர் சிறுத்தை மேல் பரிதாபப்பட்டு அது செல்லும் திசையில் கூடவே செல்கிறார். அங்கு சிறுத்தையின் குட்டி கிணற்றில் விழுந்திருப்பது தெரிகிறது. உடனே அந்த நபர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த மீட்பு படையினர் கூண்டு ஒன்றை கிணற்றில் இறக்கினர்.
தன்னை மீட்க தான் வந்துள்ளார்கள் என நினைத்த சிறுத்தை குட்டி அந்த கூண்டின் உள்ளே சென்றது. இதை மரத்தின் மேல் இருந்து சிறுத்தை பார்த்து கொண்டிருந்தது. அதன் முகம் மனிதர்களுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது. ஆக்ரோஷமான விலங்கு தனது குட்டியை காப்பாற்றுவதற்காக மனிதர்களின் கையை பிடித்து கெஞ்சுவது நெஞ்சை உருக வைப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.