ஐபிஎல்.. கோடிக்கணக்கில் சம்பளம் - ஆனால்.. உலக கோப்பையில்?
டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணியில், ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிகவிலைபோன வீரர்கள் இடம் பெறவில்லை.
தீபக் சாஹர்
கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் உலக கோப்பை அணியில் இடம் பெற தவறியுள்ளனர். இந்திய அணியில் தற்போது சிறந்த புதிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் தீபக் சாஹர்.
டி20 போட்டியில் பவர்பிளேக்குள் சிறப்பாக பந்து வீசக்கூடிய நபர்களில் ஒருவரும் கூட. மேலும், அவர் பேட்டிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஹர்ஷல் படேல் முழு உடற்தகுதிக்கு திரும்பியதால், அவரது இடம் பறிபோனது.
ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் அனைத்து வடிவங்கள் முழுவதும் நிலையான நபராக இருந்து வருகிறார். ஆனாலும் அவரது இடத்தை தீபக் ஹூடா தட்டி சென்றுள்ளார்.
இஷான் கிஷன்
அதிரடி பேட்டிங் அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். விக்கெட் கீப்பர் பேட்டர் இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.
ஆனால் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் 2022 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அதன் பிறகு இந்தியாவுக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், விக்கெட் கீப்பர் இடத்திற்கான வலுவான விண்ணப்பத்தை கொண்டிருந்தார்.
ஷர்துல் தாக்கூர்
தாக்கூர் ஒரு விக்கெட்-டேக்கர் மற்றும் ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் பந்து வீசக்கூடியவர். கூடுதலாக, அவர் பேட்டிங்கும் செய்ய கூடியவர். ஷர்துல் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த வாய்ப்புகளில் கவனம் ஈர்க்கத் தவறிவிட்டார், எனவே ஹர்ஷல் படேல் அந்த இடத்தை பிடித்துள்ளார்.
அவேஷ் கான்
அவேஷ் தொடர்ந்து 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இதுவரை விளையாடிய 15 டி20 போட்டிகளில், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி 9.11 என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அர்ஷ்தீப் சிங் சமீபத்தில் ஆசியக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசியதால் உலகக் கோப்பைக்கான அணியில் அவேஷை வீழ்த்தி இடம் பிடித்தார்.