டி20 உலகக் கோப்பை போட்டி - பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்ப்பு..!

Jasprit Bumrah Indian Cricket Team
By Nandhini Sep 30, 2022 04:47 AM GMT
Report

டி20 உலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பும்ரா விலகல்

பிசிசிஐ தன் டுவிட்டர் பக்கத்தில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக தகவல் தெரிவித்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

முகமது சிராஜ் சேர்ப்பு

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.   

Jasprit Bumrah - Mohammed Siraj