இந்திய அணியே வேண்டாம்; தெறித்து ஓடும் ஜாம்பவான்கள் - தவிக்கும் பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
டி20 உலகக் கோப்பை 2024 தொடருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. தொடர்ந்து அணியுடன் பயணிக்கவும் அவர் விரும்பவில்லை.
எனவே, அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை தகுதியுள்ள நபர்கள் அளிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடைசி தேதி மே 27. மேலும், சிறந்த பயிற்சியாளர்கள் சிலரை அணுகி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
தவிக்கும் பிசிசிஐ
இருப்பினும், ஒருவர் கூட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான பயிற்சியாளர்களாக விளங்கும் சிலர் தாங்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
ஸ்டீபன் பிளம்மிங், ரிக்கி பாண்டிங், ஆன்டி பிளவர் மற்றும் ஜஸ்டின் லாங்கர் விண்ணப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டனர். இதற்கு காரணமாக ஒவ்வொரு போட்டியின் தோல்விக்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிலரை அணியில் ஆட வைக்க வேண்டும்.
சிலரை வைக்கக் கூடாது. ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. எனவே, ஐபிஎல் தொடர் நடக்கும் இரண்டு மாதங்கள் மட்டுமே தலைமை பயிற்சியாளருக்கு ஓய்வு கிடைக்கும் என்பதால எவரும் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.