3 இடம் - 6 அணிகள் பலப்பரீட்சை !! சென்னை அணியின் Play Off வாய்ப்புகள் என்ன?
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அடுத்து சுற்றிற்கு கொல்கத்தா அணி மட்டுமே தகுதி பெற்றுள்ளது.
IPL 2024
இது வரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 9'இல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி Play off வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ஆனால், அடுத்த 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது வரை, தொடரில் இருந்து மும்பை, பஞ்சாப், குஜராத் அணி மட்டுமே வெளியேறியுள்ளன. புள்ளிப்பட்டியலில் 2 முதல் 6 இடத்தில் இருக்கும் அணிகளான முறையே ராஜஸ்தான், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.
மீதமிருக்கும் அணிகளில் ராஜஸ்தான் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ஆனால், கடும் போட்டி 3 மற்றும் 4 வது இடங்களுக்கு தான் நீடிக்கிறது. சென்னை அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. பெங்களூரு அணிக்கும் அதே தான். இவ்விரு அணிகளும் வரும் 18-ஆம் தேதி மோதுகின்றன.
அதே போல, ஹைதர்பாத் அணி இன்னும் 2 போட்டிகளை மிச்சம்வைத்திற்கும் சூழலில், அவற்றில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணிக்கு Play off நிச்சயமாகும்.
ஆகவே போட்டி என்பது சென்னை, பெங்களூரு டெல்லி, லக்னோக்கு இடையே தான் என்பது குறிப்பிடத்தக்கது.