கேப்டனை மாத்தணும் ...இல்லனா??Auction'க்கு தயாராகும் ரோகித், பும்ரா!! தவிக்கும் MI

Hardik Pandya Jasprit Bumrah Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick May 13, 2024 11:15 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

புதிய கேப்டனை கொண்டு விளையாடி வரும் மும்பை அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேற்றப்பட்டுள்ளது.

Mumbai Indians @ 2024

இதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. அவருக்கும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு மத்தியில் பெரும் சிக்கல் இருப்பதாக சில மாதங்களாகவே பேசப்படுகிறது.

Suryakumar Yadav @ 2024

அணியில் ஹர்திக் பாண்டியாவை ரோகித் சர்மாவை ஆதரிக்கும் வீரர்கள் எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அணியின் மீட்டிங் நடைபெற்றுள்ளது.

இத கவனிச்சீங்களா? மும்பையின் படுதோல்வி!! தப்பித்த ரோகித் - மாட்டிக்கொண்ட ஹர்டிக்!

இத கவனிச்சீங்களா? மும்பையின் படுதோல்வி!! தப்பித்த ரோகித் - மாட்டிக்கொண்ட ஹர்டிக்!

கேப்டனை மாத்தணும்

ரோகித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்து பேசி அணி நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மும்பை அணியின் பின்னடைவிற்கு காரணமாக, மோசமான கேப்டன்ஷிப் தான் காரணமாக அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Mumbai Indians @ 2024

அதே போல, அணியின் கேப்டனையும் மாற்றும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இல்லையென்றால் அணி மீண்டும் இதே போன்றே தோல்வியை தான் சந்திக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mumbai Indians @ 2024

இவை அனைத்தும் செய்திகளே தவிர உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு பெரிய auction நடைபெறும் நிலையில், அணியில் இருந்து விலகும் முடிவில் ரோகித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.