26 வருடம் அவஸ்தை..அந்த இடத்தில் அடைத்திருந்த பிளாஸ்டிக் - ஷாக் சம்பவம்!
இளைஞர் 26 ஆண்டுகளாக பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருந்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.
26 வருடம்..
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஆன்டி நார்டன்(32). இவருக்கு ஆறு வயதான நிலையில் விளையாட்டின் போது பிளாஸ்டிக் வளையம் ஒன்று மூக்கில் சிக்கியுள்ளது. அதனை எடுக்க அவரது தாயார் கடும் முயற்சி செய்து, அதனை அகற்றினார்.
இருப்பினும் ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளேயே சிக்கி இருந்துள்ளது. சிறுவனுக்கும் தெரியவில்லை; அவரது தாயாருக்கும் தெரியவில்லை. அதிலிருந்து, நார்டன் சுவாசிப்பதில் சில பிரச்னைகளை சந்தித்து வந்தார்.
பிளாஸ்டிக்
அதற்காக மருத்துவர்களை சந்தித்தபோது, அடிக்கடி மூக்கு வழியாக வேகமாக காற்றை வெளியேற்றும்படி அறிவுறுத்தி வந்தனர். அதன்படி, ஆன்டி நார்டனும் செய்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிளாஸ்டிக் துண்டு வெளியே வந்தது. இதை பார்த்த அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஏற்பட்டது.
இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், '' 26 ஆண்டுக்கு பின் இப்போதுதான் என்னால் நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது. வாசனையை நுகர முடிகிறது'' என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.