பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் உணவு தரும் ஏடிஎம் - பேடிஎம் நிறுவனரின் அறிவிப்பு
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் உணவு வழங்கும் ஏடிஎம் துருக்கியில் நடைமுறையில் உள்ளது.
துருக்கி
பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் இயந்திரங்கள் வெளிநாடுகளில் உள்ளன. சமீபத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி குண்டுகள் வழங்கும் வென்டிங் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.
இதே போல் துருக்கி இஸ்தான்புல் நகரில் உணவு வழங்கும் வென்டிங் இயந்திரங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
விஜய் ஷர்மா
இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014 ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெரு நாய்களுக்கும் உணவு கிடைக்கிறது.
I will love to fund this , need some champion of change. ?? https://t.co/asvGWU4JP0
— Vijay Shekhar Sharma (@vijayshekhar) July 17, 2024
இந்த புதிய முயற்சி பேடிஎம் நிறுவனர் விஜய் ஷர்மாவை கவர்ந்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.