சென்னையில் இடம் மாறும் 100க்கு மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் - அரசின் புதிய திட்டம்

Tamil nadu Chennai Greater Chennai Corporation
By Karthikraja Nov 18, 2024 11:56 AM GMT
Report

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திதிட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பேருந்துகள்

சென்னையில் புற நகர் ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரது பயன்பாட்டில் இருந்தாலும், சென்னையின் அனைத்து பகுதிகளையும் பேருந்து போக்குவரத்தே இணைக்கிறது. 

சென்னை பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. மொத்தம் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். 

தமிழ்நாட்டில் வர உள்ள முதல் ஏசி பேருந்து நிலையம் - எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் வர உள்ள முதல் ஏசி பேருந்து நிலையம் - எங்கு தெரியுமா?

பேருந்து நிறுத்தங்கள் 

சென்னையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை. சீரான இடைவெளியில் இடமாற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

chennai bus stops change

குறிப்பாக சிக்னல்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் பச்சை விளக்கு ஒளிரும்போதும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக பின்னால் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மேம்பாலங்கள், சிக்னல்கள் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டருக்கு தள்ளி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிராட்வே - முகப்பேர் (7M), வடபழனி - தரமணி (5T) இடையேயான வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்து நிறுத்த மாற்றம், பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.