குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம் - சிறுமி உட்பட 6 பேர் பலி?

United States of America Flight Death
By Sumathi Feb 01, 2025 09:30 AM GMT
Report

விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான விபத்து

அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் மிசோரி மாகாணம் நோக்கி புறப்பட்டுள்ளது.

Philadelphia

இதில் மருத்துவ நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக 6 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்; 19 பேர் பலி - பதற வைக்கும் வீடியோ!

நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்; 19 பேர் பலி - பதற வைக்கும் வீடியோ!

6 பேர் பலி?

உடனே தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் 6 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விரைந்த மீட்புக்குழுவினர் பற்றி எரியும் தீயை அணைத்துள்ளனர்.

குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம் - சிறுமி உட்பட 6 பேர் பலி? | Plane With 6 Aboard Crashes In America

முன்னதாக கன்கசஸ் மாகாணத்தில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.