Tuesday, Jul 22, 2025

நேருக்கு நேர் மோதிய ராணுவ ஹெலிகாப்டர் - பயணிகள் விமானம்..உடல் சிதறி உயிரிழந்த 67 பேர்!

United States of America Accident Helicopter Crash
By Vidhya Senthil 6 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 நடுவானில் ராணுவ ஹெலிகாப்டரும், பயணிகள் விமானமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

அமெரிக்காவின் கன்சஸ் மாகாணத்தில் உள்ள விஷிதா நகரிலிருந்து 4 ஊழியர்கள் மற்றும் 60 பயணிகள் என மொத்தம் 64 பேருடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வாஷிங்டன் மாகாணத்திற்கு நேற்று முன் தினம் இரவு (இந்திய நேரப்படி நேற்று காலை) புறப்பட்டுச் சென்றது.

நேருக்கு நேர் மோதிய ராணுவ ஹெலிகாப்டர்

இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது ராணுவத்திற்குச் சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.இந்த ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்தாக கூறப்படுகிறது.

நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்; 19 பேர் பலி - பதற வைக்கும் வீடியோ!

நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்; 19 பேர் பலி - பதற வைக்கும் வீடியோ!

அந்த சூழலில் தரையிறங்க முன்ற பயணிகள் விமானமும், புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் விமானமும் , ராணுவ ஹெலிகாப்டரும் சிதறி வெடித்தது. இதன் பாகங்கள் அனைத்தும் போடோமாக் ஆற்றில் விழுந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்

இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

நேருக்கு நேர் மோதிய ராணுவ ஹெலிகாப்டர்

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் விமானத்தின் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். காவல் துறையின் முழு விசாரணைக்குப் பிறகு தான் விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.