மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்; பீகாரில் பரபரப்பு - என்ன நடந்தது..?
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பழைய விமானம் ஒன்று மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழைய விமானம்
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பழைய விமானம் ஒன்று மும்பையிலிருந்து லாரி மூலமாக அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது பீகார் மாநிலம் மோதிகாரி அருகே விமானத்துடன் லாரி சென்றபோது, பிப்ரகோதி எனப்படும் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
இதனையடுத்து லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த விமானம் பாலத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், லாரி ஓட்டுநர் மேம்பாலத்தின் உயரத்தை சரியாக கணிக்கததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.