பரபரத்த சென்னை ஏர்போர்ட்; சேதமான விமானம் - சேவைகள் ரத்து!
டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
சென்னை, உள்நாட்டு விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் விமானம் சேதமடைந்தது. பயணிகளின் உடமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் விமானத்தில் மோதியது.
இதனால், திருச்சிக்கான 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், ‘பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து
இதனால் சென்னை முதல் திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானம் சரிசெய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி அன்று மீண்டும் விமான சேவை தொடங்கும்.
பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணங்கள் திருப்பி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.