கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் - இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பலி!
கடலில் விழுந்து விமானம் நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து
லான்ஸா (Lanhsa) விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஜெட்ஸ்ட்ரீம் 32 (Jetstream 32). இது ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ரோவாடான் என்ற தீவிலிருந்து 17 பயணிகளுடன் புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது.
அப்போது கடலுக்கு மேலே செல்லும்போது நிலை தவறிய விமானம் கடலில் விழுந்தது. உடனே இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் அங்குச் சென்று சிலரை மீட்டுள்ளனர்.
12 பேர் பலி
இந்த விபத்தில் 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பிரபல இசைக்கலைஞரான ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோவும் பலியானார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை விமானம் முழு உயரத்தை எட்ட முடியாமல் விபத்தில் சிக்கி கடலுக்கு மூழ்கியதாக தெரிவித்துள்ளனர்.