ஓய்வு காலத்தில் நிம்மதியாக வெளிநாட்டில் வாழ விரும்புறீங்களா? இந்த நாடுகளில் செலவு ரொம்ப குறைவு!
ஓய்வு காலத்தில் செட்டிலாக சில நாடுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்..
பனாமா
பணியில் இருந்த போது நீங்கள் சேமித்த பணம் ஓய்வுக்குப் பிறகு நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம்.
பனாமாவில், ஒரு மாதத்தை கடத்த 1000 டாலர்கள் இருந்தால் போதும். 50 டாலர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடலாம். விசா பெறுவதற்கான நிபந்தனைகளும் மிகவும் கடுமையானவை அல்ல.
போர்ச்சுகல்
ஐரோப்பாவில் போர்ச்சுகல் சிறந்த நாடு. இங்கு அன்றாட செலவுகள் அமெரிக்காவை விட 29% குறைவு. உலகின் மிக அழகான நகரங்களின் தாயகமாகவும் உள்ளது.
உருகுவே
லத்தீன் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் நாடு உருகுவே. அமெரிக்காவை விட அன்றாடச் செலவு இங்கு 19 சதவீதம் குறைவு. இங்கு தங்கும் அறை வாடகை 66 சதவீதம் வரை மலிவானது. சுகாதார அமைப்பு உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
ஸ்பெயின்
ஸ்பெயினின், மாட்ரிட், பார்சிலோனா, வலென்சியா மற்றும் பிற நகரங்கள் அதன் அற்புதமான கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இங்கு குடியேற விசா பெறுவது கொஞ்சம் சிரமம்.
இத்தாலி
இத்தாலி, சுகாதார அமைப்பு உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நல்ல சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. கொலோசியம், பைசாவின் சாய்ந்த கோபுரம், பாந்தியன், ட்ரெவி நீரூற்று என சுவாரஸ்யமான சுற்றுலாத் தளங்களின் தாயகமாக உள்ளது. நீங்கள் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள், வயதானவர்களுக்கு செலவுகளும் மிகக் குறைவு.