டிப்ஸ் தராத கஸ்டமர்.. கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய பெண் - ஷாக் சம்பவம்!

Attempted Murder United States of America World
By Swetha Dec 27, 2024 12:30 PM GMT
Report

பிட்சா டெலிவரி பெண் ஒருவர் கர்ப்பிணியை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்ப்பிணி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரலாண்டோவின் உள்ள கிஸ்ஸிம்மியை சேர்ந்தவர் அந்த பெண். தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது காதலன் மற்றும் ஐந்து வயது பெண்குழந்தையுடன் அப்பகுதியில் இயங்கி வரும் மோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

டிப்ஸ் தராத கஸ்டமர்.. கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய பெண் - ஷாக் சம்பவம்! | Pizza Delivery Women Stabs Pregnent Lady 14 Times

பிறகு மூவருக்கும் பசி ஏற்பட்டதால் சாப்பிடுவதற்காக ஆன்லைனில் பீட்சா ஆடர் செய்து இருக்கிறார். இந்த பீட்சா ஆர்டரை ப்ரியானா அல்வெலோ(22) என்ற பெண் டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்ததற்கு டிப்ஸாக 2 டாலரை அப்பெண் ப்ரியானாவிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் டிப்ஸ் 2 டாலர் போதாது... அதிகமாக வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் ப்ரியானா. ஆனால் அதிகமான டிப்ஸ் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ப்ரியானா அல்வெலோ முகமூடி அணிந்த

ஹேர் ஸ்டைல் செய்த காதலி.. தேடித்தேடி சென்று கத்தியால் குத்திய காதலன் - கொடூர சம்பவம்!

ஹேர் ஸ்டைல் செய்த காதலி.. தேடித்தேடி சென்று கத்தியால் குத்திய காதலன் - கொடூர சம்பவம்!

குத்திய பெண்

தனது ஆண் நண்பர்களுடன் அப்பெண் தங்கியிருந்த மோட்டலுக்கு வந்து, அவரது காதலரை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, அப்பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி இருக்கிறார். பின்னர் அந்த அறையில் இருந்த ஒரு விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

டிப்ஸ் தராத கஸ்டமர்.. கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்திய பெண் - ஷாக் சம்பவம்! | Pizza Delivery Women Stabs Pregnent Lady 14 Times

உடனடியாக அப்பெண்ணை மீட்ட அவரது காதலன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்பெண் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,

தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து போலிசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து ப்ரியானா அல்வெலோ கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளியை தீவிரமாக தேடி வரும் பணியில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.