ஹேர் ஸ்டைல் செய்த காதலி.. தேடித்தேடி சென்று கத்தியால் குத்திய காதலன் - கொடூர சம்பவம்!
காதலியை கத்தியால் குத்தி காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேர் ஸ்டைல்
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் பெஞ்சமின்(49). இவர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் சில்வா சமீபத்தில் தனது ஹேஸ் ஸ்டைலை மாற்றிக் கொள்ள விரும்பியதால்
சிகைத் திருத்தம் கடைக்கு சென்று வேறு புது ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய சில்வாவை பார்த்து பெஞ்சமின் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது தனக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை என்றும்
தன்னை கேட்காமல் ஹேர் ஸ்டைல் மாற்றியது குறித்து சில்வாவிடம் அவர் சண்டை போட, சில்வாவும் பதிலுக்கு சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்து வெளியேறிய சில்வா தனது அண்ணன் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கொடூர சம்பவம்
ஆனால் சில்வா மீதான ஆத்திரம் தீராமல் இருந்த பெஞ்சமின் நேராக சில்வாவின் அண்ணன் வீட்டிற்கே சென்று, தனது காதலியை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனுக்கும் சரமாரியாக கத்திக்குத்துகள் விழுந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே சில்வா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது அண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு
விரைந்து வந்த போலீசார் கத்தியுடன் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், பெஞ்சமின் மீது கொலை, கொலை முயற்சி, தாக்குதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.