நிலைகுலைந்த கேரளா - நிதியுதவி வழங்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்!

Kerala India Pinarayi Vijayan
By Vidhya Senthil Jul 31, 2024 11:50 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 வயநாடு

கேரளாவின் வயநாடு மேப்பாடி,சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்கு ஏற்பட்டது . இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைகுலைந்த கேரளா - நிதியுதவி வழங்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்! | Pinarayi Vijayan Appeals Helpwayanad Landslides

மேலும் அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

நிவாரண நிதி

இந்த நிலையில் ,வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைகுலைந்த கேரளா - நிதியுதவி வழங்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்! | Pinarayi Vijayan Appeals Helpwayanad Landslides

வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் அரசு உதவிகளைச் செய்யலாம்.

Account No: 67319948232, SBI, City branch, Thiruvananthapuram, IFSC: SBIN0070028. நிவாரண உதவியாகப் பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உபயோகப்படுத்திய பழைய பொருட்களைக் கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று பினராயி விஜயன், கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.