கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பயங்கர நிலச்சரிவு - மண்ணில் புதைந்த வாகனங்கள்
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை 107 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணியில் இந்திய ராணுவம் களம் இறங்கியுள்ளது.
3 கிராமங்கள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு
இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஹாசன் மாவட்டத்தில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் கார், லாரி, எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகியவை சிக்கியுள்ளது.
மீட்புப் பணிகள் முடிவதற்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெங்களூரு - மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.