வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் இது தான் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss Kerala
By Karthikraja Jul 30, 2024 11:24 AM GMT
Report

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை 90 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. 

wayand landslide

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு விரைகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண பணிகளுக்காக 5 கோடி அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக 2 நாள் துக்கம் அனுசரிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. 

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்..வயநாடு விபத்து!! த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்..வயநாடு விபத்து!! த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. 

anbumani ramadoss

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சோலையாறு அணை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இருவர் உயிரிழந்திருப்பதும் வேதனையளிக்கிறது. நிலச்சரிவில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்குத் தொடர்ச்சி மலை

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடங்கி குஜராத் வரை நீளும் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை நமக்கு கொடுத்த பெருங்கொடை ஆகும். அதை பாதுகாக்கத் தவறியதன் விளைவு தான் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகும். தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையை சூறையாடும் செயல்கள் தொடர்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் தேவை குறித்து வயநாடு நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.