விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்; புரட்டி எடுத்த பணியாளர் - வைரலான வீடியோ

Viral Video United States of America New York Flight
By Sumathi May 02, 2025 04:55 AM GMT
Report

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் செய்த தகராறு

பிரேசிலில் விமானம் ஒன்று சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி புறப்பட தயாரானது.

american airlines

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட இந்த விமானம் புறப்பட சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். பின் விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டி, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மாறி மாறி கூச்சலிட்டுள்ளார்.

போர் விமானங்கள், ட்ரோன்களுக்கு செக் - பாகிஸ்தானுக்கு விழுந்த அடுத்த அடி

போர் விமானங்கள், ட்ரோன்களுக்கு செக் - பாகிஸ்தானுக்கு விழுந்த அடுத்த அடி

வைரல் வீடியோ

உடனே, விமான பணியாளர் ஒருவர் அந்த பெண்ணை கீழே தள்ளி கட்டுப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் இருக்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது மற்றொரு பயணி எழுந்து சத்தமிட்டதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண் மற்றொரு பயணியுடன் சேர்த்து விமானத்தில் இருந்து வெளியே்ற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் விமானம் புறப்படுவதில் 2 மணிநேரம் தாமதமாகியுள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.