யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து கோரவிபத்து - 28 பேர் பலி!
Pakistan
Death
Iraq
By Sumathi
பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
பாகிஸ்தானில் இருந்து பேருந்து ஒன்று ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஷியா யாத்ரீகர்கள் 51 பேர் பயணித்துள்ளனர்.
7ம் நூற்றாண்டின் ஒரு ஷியா துறவி இறந்ததைத் தொடர்ந்து 40வது நாளை குறிக்கும் அர்பாயீனை நினைவுகூருவதற்காக யாத்ரீகர்கள் ஈராக் நோக்கி சென்றுள்ளனர்.
28 பேர் பலி
அந்த பேருந்து மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 28 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.