35 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி - அரசு அறிவிப்பு
35 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை
35 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச விசா வசதியின் கீழ் நாட்டுக்குள் நுழைய இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அக்டோபர் 1, 2024 முதல் 6 மாதங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச விசா
அதன்படி இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா,. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ்,

ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முனைப்பிலும், சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலைக்கு டஃப் கொடுக்கும் மாம்பழம்: ஒரு பழத்தின் விலை தெரியுமா? வியக்க வைக்கும் அரிய ரகம்! Manithan