மைசூரு அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட கமிஷனர்!!
உலக புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் தானியங்களை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களுடன், ஒரு ஜெயின் அமைப்பின் சார்பில் தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம் மற்றும் அரிசி ஆகியவை புறாக்களுக்கு வழங்கப்படுகிறது.

அதிகப்படியான உணவு மைசூர் அரண்மனையின் சுற்றுப்புறத்தின் தூய்மையை பாதித்தது மட்டுமல்லாமல், புறாக்களின் எச்சம் படிவதற்கும் வழிவகுத்தது. பாரம்பரிய நிபுணர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட புறாக்களுக்கு உணவளிக்கும் இத்தகைய நடைமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், என்றார்.
அதிரடி உத்தரவு
இது தொடர்பாக தான் மாவட்டத்தின் துணை ஆணையர் கே.வி. ராஜேந்திரன் மைசூரு அரண்மனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமான கட்டிடத்தின் அருகே புறாக்களுக்கு அதிகப்படியான உணவளிப்பதால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு அரண்மனையின் வடக்கு வாசலில் அதிக அளவில் தானியங்களை கொட்டிவது கட்டிடத்தின் தூய்மையையும் அழகையும் கெடுக்கும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, திரு.ராஜேந்திரன் மைசூரு அரண்மனை வாரியம் மற்றும் மைசூரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புறாக்களுக்கு உணவளிக்கும் இடத்தை பாரம்பரிய கட்டிடங்களில் இருந்து படிப்படியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிட்டி கார்ப்பரேஷன் (MCC) மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் உள்ளது.
உணவளிக்கும் இடத்தில் புறாக் கூட்டங்கள் வந்து செல்வது செல்ஃபி பாயிண்ட் மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராபர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan