மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - வீட்டை விட்டு துரத்திய குடும்பம்!

Sexual harassment Rajasthan Crime
By Sumathi Oct 28, 2022 05:33 AM GMT
Report

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை குடும்பம் கைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான், உதய்பூரில் உள்ள ஹிரன் மங்க்ரி பகுதியில் 22 வயது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - வீட்டை விட்டு துரத்திய குடும்பம்! | Physically Challenged Woman Raped Rajasthan

அதனைத் தொடர்ந்து பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அந்த பெண் காப்பகத்தில் தங்க விரும்பாமல் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது பெண் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கைவிட்ட குடும்பம்

உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது தான் அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் விசாரித்ததில் அந்த பெண்ணை 4 ஆண்கள் பல்வேறு சமயங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதனையடுத்து அந்தப் பெண்ணின் தாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விஷயம் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால்

அவமானத்திற்கு பயந்து இதை வெளியே தெரிவிக்காமல் பெண்ணையும் வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக வாக்குமூலம் தந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.