பயத்தில் தனது பிறப்பு உறுப்பை துண்டித்த மாற்று திறனாளி - விசாரணையில் விபரீதம்!
மாற்று திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் வைத்துள்ளனர்.
மாற்று திறனாளி
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அப்துல் வாசித் (35) . இந்த நபர் ஓர் மாற்று திறனாளியாவர். இவர் போக்ஸோ வழக்கில் சிக்கி போலீஸ் கஸ்டடியில் இருந்துள்ளார்.
அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சில பெண்களிடம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அப்துல் வாசித் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி போலீசார் அவரை இது குறித்து விவரமாக விசாரிக்க கஸ்டடியில் எடுத்து இருக்கின்றனர்.
தனது உறுப்பை..
இந்த நிலையில், நேற்று இரவு தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த மாற்று திறனாளியான அப்துல் வாசித், அந்த காவல் நிலையத்தில் இருந்த கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து,
தனது அந்தரங்க உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு ஏராளமான ரத்தம் வீணாகியுள்ளது.இதனை கண்ட போலீசார் அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அப்துலுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் அவர் உயிர்பிழைத்தார்.
மெல்ல அவரது உடல்நிலை தற்போது சீராகி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும், இவரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளார்.