பெண்ணின் பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி : மருத்துவர்களின் அலட்சியத்தால் அரங்கேறிய துயர சம்பவம்

Puliyankulam Hindu College
By Irumporai Mar 12, 2023 05:11 AM GMT
Report

பிரசவத்திற்கு வந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி உள்ளே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

உடைந்த ஊசி

  அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழு தனது பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசியை வைத்துவிட்டதாக அந்தப் பெண் தன் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 13, 2016 அன்று எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் உடைந்த ஊசியின் ஒரு பகுதி, தாயின் பிறப்பு உறுப்பில் பதிந்திருப்பது தெரியவந்தது. இதைப்பற்றி அந்த பெண்ணிடமும் குடும்பத்தினரிடமும் தெரிவிக்காமலே மருத்துவமனை நிர்வாகம், அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசியை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றது.

மூன்று மணிநேரம் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் பெண்ணின் உடல்நிலை மேலும் சிக்கலானது. பெண்ணின் குடும்பத்தினர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேறு மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்தனர்.

பெண்ணின் பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி : மருத்துவர்களின் அலட்சியத்தால் அரங்கேறிய துயர சம்பவம் | Hospital Woman For Leaving Broken Needle

தனியார் மருத்துவமனை

ஆனால் மருத்துவமனை அதிகாரிகள், அந்தப் பெண் தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற ஒப்புக்கொள்வதாக, பெண்ணின் கணவர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றனர்.

இந்நிலையில், ஊசியின் பாகம் இன்னும் தன் உடலில் பதிந்திருப்பதாகவும், அதனால் அளவில்லாத கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில், உடைந்த ஊசி பெண்ணின் பிறப்பு உறுப்பில் பதிந்திருப்பதை ஒப்புக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அப்பகுதியில் ஏற்பட்ட அழற்சியின் காரணமாக அறுவை சிகிச்சையின்போது ஊசியைக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.