இப்படியா பண்ணுவிங்க.. ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்!
பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகம்
பீகார், தர்பங்கா மாவட்டத்தில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

அதற்கான ஹால்டிக்கெட் சில நாள்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்த போது தான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேரந்திர சிங் தோனி, அம்மாநில ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரின் புகைப்படங்களுடன் ஹால்டிக்கெட் வந்துள்ளது.
ஹால் டிக்கெட் சர்ச்சை
இது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து, ஹால்டிக்கெட்டுகள் முற்றிலும் இணைய வழி மூலமே ழங்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய அனைவருக்கும் தனிப்பட்ட உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புகைப்படங்கள் மற்றும் தரவுகளை மாணவர்களே பதிவேற்றினர், அவர்களில் சிலர் புகைப்படங்களை மாற்றி பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இதனால் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும்,
பிரதமர் மற்றும் ஆளுநரின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தியதும் தவறான விஷயம் எனவும், சம்மந்தப்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.