ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.!
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் முன்னணியில் உள்ளன. இவை 90% வரை வெற்றிகரமாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது நார்வேயில் ஃபைசர் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட 29 பேர் உயிரழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் அனைவருமே 70 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் என நார்வே அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதன் பக்க விளைவுகளையும் தொடர்ந்து கண்கானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து நடவடிக்கையில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.