ஏடிஎம் கூட போக வேணாம் - இனி UPI செயலி மூலமே PF பணம் பெறலாம்
UPI செயலி மூலம் PF உரிமை கோரல் தொகையை பெரும் வகையில் இந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்ட உள்ளது.
பிஎஃப் கணக்கு
வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள் , தங்கள் பிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
EPFO 3.0 என்ற இந்த திட்டத்தின் கீழ் கார்டு வழங்கி அதை வைத்து ஏடிஎம் மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த முயற்சித்து வருகிறது.
UPI மூலம் PF
அதனையடுத்து, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும் போது, நிறுவனத்தின் தேவை இல்லாமல், UAN வைத்துள்ள பி.எப் சந்தாதாரர்கள் தாமாகவே இணையதளம் வழியாக, விண்ணப்பித்து பி.எப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தியது.
தற்போது UPI செயலிகள் மூலம் PF உரிமை கோரல் தொகையை பெற முடியும் வகையில் இந்த நடைமுறையை எளிமைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் நடைமுறைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, வணிக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து தொழிலாளர் அமைச்சகம் டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
2025 நிதியாண்டில் தற்போதுவரை, 50 மில்லியனுக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, ரூ.2.05 லட்சம் கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. 2024 நிதியாண்டில், 44.5 மில்லியன் கோரிக்கைகளைத் ரூ.1.82 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள் IBC Tamil
