இனி நிறுவனத்தின் உதவி தேவை இல்லை - PF கணக்கில் வந்த முக்கிய மாற்றம்
பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றும் செயல்முறையை EPFO எளிமைப்படுத்தியுள்ளது.
பிஎஃப் கணக்கு
இந்தியாவில் எந்த ஒரு நிறுவனத்திலும் தனி நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இருந்தால், அந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் சேர்க்கப்படுகிறார்.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைப்பு படிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதேபோல், நிறுவனமும் சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப் நிதிக்கு வழங்க வேண்டும்.
புதிய வசதிகள்
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும் போது, அந்த நிறுவனத்திற்கு பிஎஃப் கணக்கை மாற்றும் போது, புதிய அல்லது பழைய நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
தற்போது, UAN வைத்துள்ள பி.எப் சந்தாதாரர்கள், இணையதளம் வழியாக, தாங்களே விண்ணப்பித்து பி.எப்., கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களே EPFO போர்டல் மூலம், பெயர் நேரடியாக பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களைச் சரி செய்ய உதவுகிறது. அக்டோபர் 1, 2017க்குப் பிறகு வழங்கப்பட்ட உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.