பூடான் சென்ற இந்தியர்.. பெட்ரோல் விலையை கண்டு அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா?
பூடான் நாட்டில் பெட்ரோல் விலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெட்ரோல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி, இந்தியாவில் தமிழ்நாடு, பீகார், வங்காளம், ஒரிசா, உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.
பூடான்
இந்த நிலையில் பூடான் நாட்டிற்கு இந்தியர் ஒருவர் என்பவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது அங்கு பெட்ரோல் விலையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தான் பூடானில் உள்ள பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பெட்ரோல் உள்ளேன்.
இங்கு பெட்ரோல் விலை 63.92 பைசா என்று கூறுகிறார்.அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.64 ஆகும் இந்தியாவில் சுமார் ரூ.100க்கு விற்கப்படும் பெட்ரோல் பூட்டானில் வெறும் ரூ.64க்கு கிடைப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.