அதிரடியாக எகிறும் பெட்ரோல், டீசல் விலை - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Petrol diesel price Puducherry
By Sumathi Dec 29, 2024 06:30 AM GMT
Report

பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை 

அரசின் வரி வருவாயை பெருக்கும் விதமாக புதுவையில் வாட் வரியை உயர்த்த புதுவை அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.

petrol diesel price hike

தொடர்ந்து வாட் உரி உயர்த்தப்பட்டு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுவையில் பெட்ரோலுக்கான வாட் வரி 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2 கணவர்களுடன் ஒரே வீட்டில்.. ஒன்னாவே சாப்பிட்டு தூங்குவாங்க; மனைவி நெகிழ்ச்சி!

2 கணவர்களுடன் ஒரே வீட்டில்.. ஒன்னாவே சாப்பிட்டு தூங்குவாங்க; மனைவி நெகிழ்ச்சி!

திடீர் உயர்வு

டீசலுக்கான வாட் வரி 11.22 சதவீதமாகவும் காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் உயர்கிறது. ஜனவரி மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

puducherry

இதன் மூலம் புதுவையில்,பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1.25 முதல் ரூ.2 வரை விலை உயருகிறது. இது அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

டீசல், பெட்ரோல் விலை ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களை விட புதுவையில் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.