வரலாறு காணாத அளவில் உயர்ந்த பெட்ரோல் விலை - தவிக்கும் மக்கள்
பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது. இதே போன்று ஒரு லிட்டர் டீசலின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.280 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 12.90 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் அந்நாட்டு மதிப்பில் 202.73 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததே, எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
விலை உயர்வு
பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காத உயர்வை கண்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.210க்கும் ஒரு கிலோ சிக்கன் ரூ.700-800க்கும் விற்பனை ஆவதாக தகவல்கள் கூறுகின்றன.
15 நாள்களுக்கு முன்னர் தான் அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.35 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.