பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்க ராணுவம் தயார்..ஆனால் ஏன் பாஜக அனுமதிக்கவில்லை - நக்மா

Nagma BJP Pakistan Bollywood
By Sumathi Nov 28, 2022 04:48 AM GMT
Report

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்க ராணுவம் தயாராக இருந்தால், பாஜக ஏன் அனுமதி வழங்கவில்லை என நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ரிச்சா சதா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து முழுமையாக திரும்ப பெற நாங்கள் தயாராக உள்ளோம். அரசின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த ஆபரேஷனை விரைந்து முடிப்போம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்க ராணுவம் தயார்..ஆனால் ஏன் பாஜக அனுமதிக்கவில்லை - நக்மா | Controversy On Tweets Richa Chadha And Nagma

பாகிஸ்தான், போர் ஒப்பந்தத்தை மீறினால் எங்களது பதில் வேறுமாதிரி இருக்கும் என்று வடக்கு பிராந்திய கமாண்டர் ஒருவர் சமீபத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பாலிவுட் நடிகை ரிச்சா சதா கல்வானில் சீன ராணுவம் நுழையும் என பதிலளித்திருந்தார். இந்திய வீரர்களை கிண்டல் செய்வது போல் ரிச்சா சதா பதிவிட்டுள்ளதாக பலர் கடுமையாக விமர்சித்தனர்.

நக்மா  கேள்வி?

அதன்பின் அதற்கு ரிச்சா அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மும்பை காங்கிரஸின் துணை தலைவர் நக்மா,நான் ஒரு ராணுவ வீரரை மட்டுமே ஆதரித்தேன். ரிச்சா சதாவின் டிவிட்டை அல்ல.

ராணுவத்தை கேலி செய்கிறேன் என்று சொல்வது சரியல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை மீட்க ராணுவம் தயாராக இருந்தால், அவ்வாறு செய்ய, பா.ஜ.க. ஏன் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.