ராகுல்காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையினை பாஜக செய்து வருகிறது - காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து
ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் பாதயாத்திரை
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்தது.
உண்மை முகத்தை பார்க்கின்றனர்
ஆனால், தற்போது ராகுல்காந்தியின் உண்மை முகத்தை மக்கள் பார்க்கின்றனர். ராகுல்காந்தி படித்தவர், இரக்கமுள்ளவர், முடிவெடுக்கக்கூடியவர். பிரதமர் யார்?
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால் முடிவு செய்யப்படுபவர். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரை ராகுல்காந்தியை பிரதமராக மேற்கொள்ளப்படவில்லை. யாத்திரையின் மதிப்பை குறைக்க வேண்டாம் என்றார்.