பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பெட்ரோல், டீசல் விலை திடீரென அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல் மீதான கர்நாடக விற்பனை வரி 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், லிட்டர் பெட்ரோல் விலை, 99.86 ரூபாயில் இருந்து, 102.86 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், லிட்டர் டீசல் விலை, 85.95 ரூபாயில் இருந்து, 88.96 ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், பெங்களூரு வழியே செல்வதால், 40 சதவீத லாரிகள், டீசல் தேவையை, கர்நாடகாவில் பூர்த்தி செய்து கொள்கின்றன.
உயர்வு
இதற்கு விலை குறைவே காரணமாக இருந்தது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ், தமிழகத்தை விட புதுச்சேரி, கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு, 7 ரூபாய் வரை குறைவாக இருந்ததால், இங்குள்ள லாரிகள், அங்கு டீசல் நிரப்பின.
இதனால், தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் உயர்த்தியுள்ளதால் விலை வித்தியாசம் குறைந்துள்ளது.
இந்நிலையில், திமுக லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு, லாரி உரிமையாளர்களின் கோரிக்கையான டீசல் விலை குறைப்பை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
இதன் வாயிலாக விற்பனை மட்டுமின்றி வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.