பெட்ரோல்-டீசல் விலை குறைகிறது..? வெளியான மகிழ்ச்சி தகவல் - எவ்வளவு தெரியுமா?
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல்-டீசல்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 102.63க்கும் , டீசல் விலை லிட்டர் ரூ.94.24க்கும் விற்கப்படுகிறது.
குறையும் விலை..?
இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.