2 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த பெட்ரோல் டீசல் விலை - அரசு முக்கிய அறிவிப்பு!
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல்
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2022 மே மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த விலை குறைப்பு காலை 6 மணி முதல் அமலக்கு வந்தது.
விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 88 காசுகள் குறைந்து 100 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனையாகிறது டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் குறைந்து 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைந்து 94 ரூபாய் 72 காசுகளுக்கும்,
மும்பையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 10 காசுகள் குறைந்து 104 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.