யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Tamil nadu Chennai Madras High Court
By Swetha Aug 06, 2024 07:00 AM GMT
Report

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த உரிய நடைமுறைகள் கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

யூடியூப் சேனல்

சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "யூடியூப் சேனல்கள் எந்த வரைமுறையும் இல்லாமல் வதந்திகளையும், உண்மைத் தன்மையற்ற தகவல்களையும் பரப்பி வருகிறது.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! | Petition To Control Youtube Channels Court Order

ஊடக விசாரணை என்ற பெயரில் காவல் துறையினரின் புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனால் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதிலும், விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு? அதற்கான சரியான நேரம் இதுதான் - உயர்நீதிமன்றம் பரபர கருத்து!

யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு? அதற்கான சரியான நேரம் இதுதான் - உயர்நீதிமன்றம் பரபர கருத்து!

நீதிமன்ற உத்தரவு

யூடியூப் சேனல்களின் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரிக்கை - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! | Petition To Control Youtube Channels Court Order

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.