இறைச்சி சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைக்கக் கூடாது - பீட்டா கோரிக்கை
இறைச்சி உண்ணும் ஆண்களுடன், பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என பீட்டா அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பீட்டா அமைப்பு
பீட்டா விலங்குகள் நலன் சார்ந்து இயங்கும் ஒரு அமைப்பாகும். பருவநிலை மாற்றத்திற்கு பெண்களை விட ஆண்கள் தான் காரணம் என பீட்டா அமைப்பின் ஜெர்மன் கிளையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால், பெண்கள் இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்திற்கு இறைச்சி உண்பதும் ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
உடலுறவு மறுப்பு
உணவு பழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெண்களை விட ஆண்கள் 41 சதவீதம் பசுமை இல்ல வாயுகளை வெளியேற்றுவதாக, கடந்தாண்டு அறிவியல் தொடர்பான இதழில் வெளியான ஆய்வறிக்கையை பீட்டா அமைப்பினர் மேற்கோள்காட்டுகின்றனர்.
இதனால், உலகத்தை காப்பற்ற பெண்கள் உடலுறவு மறுப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும், இதன்மூலம் மாமிசம் உண்ணும் ஆண்களுக்கான குழந்தைபேறை தடுக்க வேண்டும் எனவும் பீட்டா அமைப்பு பெண்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இறைச்சி சர்ச்சை
இதுகுறித்து, பீட்டா அமைப்பின் ஜெர்மனிய பிரச்சாரக்குழு தலைவர், டேனியல் காக்ஸ்,'ஆணாதிக்க மனநிலையும் பருவநிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு இப்போது அறிவியல் சான்றுகள் கிடைத்துள்ளன. நீங்கள் பருவமழை மாற்ற பிரச்சனையை தீர்க்க விரும்பினால், நீங்கள் இறைச்சி உண்பதை குறைக்க வேண்டும்.
மேலும் இறைச்சி உண்பது ஆண்மைக்கான அழகு என கட்டமைக்கப்படும் வரை அது நடக்கப்போவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளாததால், அவர்களுக்கு பிறக்காத ஒவ்வொரு குழந்தையும் ஆண்டுக்கு 58.6 டன் கார்பன் டையாக்சைடுக்கு (CO2) சமமான அளவை சேமிக்கிறது.
இறைச்சி சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளை பெற விரும்பும் ஆண்கள், வருங்காலத்தில் பிரச்சனையில்லாமல் இந்த பூமியில் வாழ வேண்டுமென்றால், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.