இயல்புக்கு மாறான உடலுறவு... 8 ஆண்டுகளுக்குப் பின் கணவனை பெண் என அறிந்த மனைவி!

Gujarat Marriage Relationship Crime
By Sumathi Sep 17, 2022 07:38 AM GMT
Report

8 ஆண்டுகளுக்குப் பின் தனது கணவர் பெண் என மனைவி ஒருவர் அறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது திருமணம்

குஜராத், வதோதராவைச் சேர்ந்தவர் 40 வயதுப் பெண். இவர் தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கோத்ரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரளித்துள்ள பெண்ணின் முதல் கணவர் கார் விபத்தில் இறந்துவிட்டார்.

இயல்புக்கு மாறான உடலுறவு... 8 ஆண்டுகளுக்குப் பின் கணவனை பெண் என அறிந்த மனைவி! | Wife Identified Her Husband As Woman

இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு விராஜ் வர்தன் என்ற இளைஞரிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் அறிமுகமாகி இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

கணவன் ஒரு பெண்

அதன்பின் இருவரும் ஹனிமூனுக்கு காஷ்மீர் சென்றுள்ளனர். இருப்பினும், விராஜ் திருமண வாழ்வில் முறையாக ஈடுபடவில்லை. பல மாதங்களாக மனைவியிடம் உடலுறவு கொள்ள விராஜ் மறுத்துள்ளார். அவருக்கு மனைவி மிகவும் அழுத்தம் கொடுத்ததை அடுத்து,

இயல்புக்கு மாறான உடலுறவு... 8 ஆண்டுகளுக்குப் பின் கணவனை பெண் என அறிந்த மனைவி! | Wife Identified Her Husband As Woman

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் ரஷ்யாவில் இருந்தபோது, ஒரு விபத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால், தான் சிறு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என கூறியுள்ளார்.

அதிர்ச்சி புகார்

மேலும், கடந்த 2020 ஜனவரி மாதம், உடல் பருமன் காரணமக தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என கூறி கொல்கத்தா சென்றுள்ளார். அதன்பின், அவர் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்த மனைவி அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதை கண்டுபிடித்துள்ளார்.

அதனையடுத்து, மனைவியுடன் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும், உண்மையை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து இந்த அதிர்ச்சி புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்த விராஜ் வர்தனை, வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.