மாணவிகள், அவர்களின் தாயார், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ கால் - சிக்கிய பி.டி. வாத்தியார்!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் கைது
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், சுந்தர் சிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
திடுக்கிடும் தகவல்கள்
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுந்தர்சிங் மாணவிகள் உள்பட பல இளம்பெண்களிடம் பழகி, அவர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது அவர்களை ஆடைகளை கழற்ற வைத்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். மாணவிகளோடு பழகியது மட்டுமின்றி அவர்களின் தாயாருடனும் தொடர்பில் இருந்துள்ளார். அதில், கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் தான் சுந்தர்சிங்கின் டார்கெட்.
மேலும், பல ஆசிரியைகளுடனும் பேசி பழகி, அவர்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுந்தர்சிங்கின் செல்போனை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் மேலும் பல ஆதாரங்கள் சிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.