வளர்ப்பு பூனை கீறியதில் உயிரிழந்த நபர் - வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்!
வளர்ப்பு பூனை கீறியதில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வளர்ப்பு பூனை
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் டிமிட்ரி யுகின் - நடால்யா தம்பதியினர். 55 வயதாகும் டிமிட்ரி யுகின் ஸ்டியோப்கா என்ற பூனையை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பூனை காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிமிட்ரி யுகின் பூனையைத் தேடி அலைந்துள்ளார்.
ஒருவழியாக அருகிலுள்ள தெருவிலிருந்து கண்டெடுத்தார். இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது ஸ்டியோப்கா பூனை எதிர்பாராத விதமாக டிமிட்ரி யுகின் உடலில் நகத்தால் கீறியது.
இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் மற்றும் ரத்தம் உறைவு சீராக இல்லாத பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது.
உரிமையாளர்
மேலும் பூனை கால் பகுதியில் நரம்பு கிழிந்தது ரத்த போக்கு அதிக அளவில் வெளியேறி நிலைமையை மிகவும் சிக்கலானதாக மாற்றியது.
இதனைத் தொடர்ந்து உதவிக்குத் தனது நண்பரை அழைக்கவே அவர் முதலுதவி செய்துள்ளார். இருப்பினும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து மருத்துவக் குழுவுக்குத் தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது ஏற்கனவே யுகின் உயிரிழந்து இருந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.