நடந்து வந்த எந்திர நாய்..பதறி செல்லபிராணிகள் கொடுத்த ரியாக்ஷன் - வைரல் வீடியோ!
எந்திர நாயை கண்டு செல்லபிராணிகள் பதறி ஓடிய வீடியோ வைரலாகி உள்ளது.
எந்திர நாய்..
இந்த காலகட்டத்தில் தொடங்கி மெல்ல மெல்ல ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே உள்ள நிலையில் மனித சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சியும் உள்ளது.
அந்த வகையில், நாய் உருவம் கொண்ட ரோபோக்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி ராணுவத்திலும் மேலை நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்த நிலையில், ஜப்பானில் இளைஞர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார்.
வைரல் வீடியோ
அப்போது அங்கே தன் ஓனர்களுடன் வந்திருந்த செல்லப்பிராணி நாய்கள் ரோபோ நாயை பார்த்து பயந்து குரைத்தன. பின்னர் அதனிடம் இருந்து விலகி தெறித்து ஓடின.
Dogs respond to a robot dog
— Science girl (@gunsnrosesgirl3) October 1, 2024
pic.twitter.com/7C9PehoCOz
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 'நாய்கள் ஓடுவதுபோல் எந்திர மனிதர்களுக்கு மனித இனம் பயப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்பதான கருத்துகளை பலர் பதிவிட்டு உள்ளனர்.