இறந்து போன நாய்க்கு சிலை வைத்து சாமியாக வணங்கி வரும் நபர் - நெகிழ்ச்சி சம்பவம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர்.
இவர் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு ‘டாம்குமார்’ என்று பெயர் வைத்து 11 ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.
முத்துவுக்கு நாய் டாம்குமார் பாசத்துடன், நன்றிக்கடன் செலுத்தி வந்தது. ஆனால், கடந்த ஆண்டு நாய் ‘டாம்குமார்’ இறந்து போனது.
இதனையடுத்து, நாய் ‘டாம்குமார்’ செய்த நன்றியை மறக்காத முத்து நாய்க்கு சிலை வைக்க முடிவு செய்தார்.
இதற்காக மகாபலிபுரத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள உயிரோட்டமான டாம்குமாரின் கற்சிலையை ஆர்டர் கொடுத்து வாங்கினார்.
தனது செல்லப் பிராணி ‘டாம்குமார்’ இறந்த இடத்திலிருந்து பிடி மண்ணை எடுத்து இளையான்குடி அருகே பிராமண குறிச்சியில் உள்ள தனது தோட்டத்தில் அச்சிலையை வைத்துள்ளார்.
இச்சிலைக்கு செவ்வாய், வெள்ளி தோறும் பூஜை நடத்தி வருகிறார் முத்து.
இது குறித்து முத்து கூறுகையில், செல்ல நாய்குட்டி எனது இன்னொரு மகனைப் போல நான் வளர்த்து வந்தேன். அதன் இறப்பு என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, அதன் நினைவாக சிலை வைத்தேன் என்றார்.
இறந்து போன நாய்க்கு, முத்து சிலை வைத்து சாமியாக வணங்கி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.