பேரூர் ஆதீனத்தை திடீரென சந்தித்த கமல்ஹாசன் - காரணம் என்ன?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் மே 2ம் வாக்கு எண்ணப்படுகிறது. யார் அரியணை ஏறப்போகிறார் என்பது அன்றே தெரிந்துவிடும். இதுவரை தமிழகத்தை திமுக மற்றும் அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இதற்கு மாற்றாக வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் முனைப்புடன் களத்தில் குதித்துள்ளன. தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை திமுகவுக்கே சாதகமாக இருக்கின்றன. திமுக, அதிமுகவுக்கு அடுத்த படியாக மக்கள் நீதி மய்யத்துக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அவை கூறுகிறது.
கிட்டத்தட்ட 10% வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இறங்கி வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளாரை திடீரென நேரில் சந்தித்துள்ளார். கமல்ஹாசனுக்கு தற்போது காலில் அடிபட்டிருப்பதால் ஊன்றுகோல் உதவியுடன் சென்ற அவர், தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.