மாற்றுப்பாலினத்தவர்கள் எல்லாம் மனநோயாளிகள் - அரசின் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை!

LGBTQ World Peru
By Swetha May 17, 2024 05:45 AM GMT
Report

மாற்று பாலினத்தவரை மனநோயாளிகள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

மாற்றுப்பாலினம்

உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் பெரு நாட்டின் அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிக்காமல் அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாற்றுப்பாலினத்தவர்கள் எல்லாம் மனநோயாளிகள் - அரசின் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை! | Peru Announces Lgbtq People Are Mentally Ill

அண்மையில், ஒரு அரசாணையில் அந்நாட்டு அதிபர் தினா பலுவரேட் கையொப்பமிட்டுள்ளார். அதில், மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவியை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச நோய்களின் பட்டியலிலிருந்து மாற்றுப்பாலின சிக்கல்களை உலக சுகாதார அமைப்பு நீக்கி இந்த ஆண்டுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து தற்போது இந்த முடிவை பெரு அரசு அறிவித்திருக்கிறது.

LGBTQ பிரிவினரை இப்படித்தான் அழைக்கனும் - உயர்நீதிமன்றம் அதிரடி!

LGBTQ பிரிவினரை இப்படித்தான் அழைக்கனும் - உயர்நீதிமன்றம் அதிரடி!

அரசின் அறிவிப்பு

இந்த உத்தரவு LGBTQ மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும் என்றும், ஆனால் அவர்கள் மாற்று சிகிச்சை எதற்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். அரசு தரப்பு இதனை நியாயப்படுத்தினாலும், பெரு நாட்டில் உள்ள பல்வேறு அமைப்பினர்கள் அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

மாற்றுப்பாலினத்தவர்கள் எல்லாம் மனநோயாளிகள் - அரசின் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை! | Peru Announces Lgbtq People Are Mentally Ill

இந்த அறிவிப்பை திரும்ப பெறப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என கூறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல இந்தியா போன்ற கலாச்சாரம், பண்பாடு மிக்க நாடுகளில் கூட இன்னும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை.

இவர்களுள் பலர் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து எந்த திட்டமும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் மூன்றாவது பெரிய நாடான பெருவில் மாற்று பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள மாற்று பாலினத்தவர்கள், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.