தன்பாலின உறவு; இனி கடுமையான தண்டனை - புதிய சட்டத்திற்கு அரசு ஒப்புதல்
தன்பாலின உறவு குறித்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின சேர்க்கை
உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி. இவர் தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றியுள்ளார். அதன் அடிப்படையில், தன்பாலின சேர்க்கை, திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடனும், சிறார்களுடனும், சமூகத்தின் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் உடலுறவு கொள்வதும் இதில் அடங்கும். தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயற்சிக்கும் நபருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
புதிய சட்டம்
இந்த சட்டப்படி, LGBTQ சமூகத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிவது தவறு இல்லை. ஆனால் அதனைத்தொடர்ந்து, தன்பாலின திருமணத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின உறவு குற்றச்செயல் என்பது குறிப்பிடத்தக்கது.