உடலை தகனம் செய்த அடுத்த நாளே..உயிருடன் வீடு திரும்பிய நபர் - திகில் சம்பவம்!

Gujarat India Death
By Swetha Nov 18, 2024 03:10 AM GMT
Report

நபர் ஒருவரை அடக்கம் செய்த மறுநாள் உயிருடன் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் தகனம் 

குஜராத் மாநிலம் நரோதா பகுதியை சேர்ந்தவர் ப்ரிஜேஷ் சுதர் (43). இவர் கடந்த அக்டோபர் 27ம் தேதி அவரது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனைத்தொடர்ந்து, ப்ரிஜேஷ் காணவில்லை என கவலையுற்ற அவரது குடும்பம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

உடலை தகனம் செய்த அடுத்த நாளே..உயிருடன் வீடு திரும்பிய நபர் - திகில் சம்பவம்! | Person Returned Home Alive After His Burial

இந்த நிலையில், அவர் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் இருந்த ஒரு நடுத்தர வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலை அடையாளம் காண ப்ரிஜேஷ் குடும்பத்தினர் போலீசாரால் அழைத்து வரப்பட்டனர்.

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...!

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...!

 திகில் சம்பவம்

அந்த நபரின் உடல் வாகு காணாமல் போன ப்ரிஜேஷை ஒத்துப்போனதால் அவர்தான் ப்ரிஜேஷ் என்று குடும்பத்தினர் உறுதிப்படுத்தி கூறினர். இதையடுத்து, அவரது உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.

உடலை தகனம் செய்த அடுத்த நாளே..உயிருடன் வீடு திரும்பிய நபர் - திகில் சம்பவம்! | Person Returned Home Alive After His Burial

ஆனால் மறுநாளே வீட்டில் அவரது மறைவுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ப்ரிஜேஷ் வந்ததைப் பார்த்து குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில், பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ்,

மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறினார் என்று போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே புதைக்கப்பட்டது யாருடைய உடல் என விசாரணை நடைபெற்று வருகிறது.